Monday, April 16, 2012

Mumbai Indians vs Delhi daredevils highlight results




     மும்பை:- டில்லி அணியிடம் மும்பை காலி!!! 92 ரன்களுக்கு சுருண்டு தோல்வி!!!

                                         
மும்பை:ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய டில்லி டேர்டெவில்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது. 92 ரன்களுக்கு சுருண்ட மும்பை அணி, சொந்த மண்ணில் ஏமாற்றம் அளித்தது.

மும்பையில் நேற்று நடந்த ஐ.பி.எல்., டுவென்டி-20 தொடரின் 19வது லீக் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.மலிங்கா இல்லை:மும்பை அணியில் தொடர்ந்து நான்காவது போட்டியாக சச்சின்(விரல் காயம்) இடம் பெற இயலவில்லை.

 மலிங்கா(முதுகு வலி), ஜேம்ஸ் பிராங்க்ளின், சுமன் நீக்கப்பட்டு, ஆர்.பி.சிங், டேவி ஜேக்கப்ஸ், கிளின்ட் மெக்காய் வாய்ப்பு பெற்றனர்.

 டில்லி அணியில் மெர்விக்கு பதிலாக ராஸ் டெய்லர் இடம் பெற்றார். டாஸ் வென்ற டில்லி அணி கேப்டன் சேவக், பீல்டிங் தேர்வு செய்தார்.விக்கெட் மடமட:மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர்.

டில்லி பவுலர்கள் பட்டையை கிளப்ப, விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. சுழலில் மிரட்டிய ஷாபாஸ் நதீம், முதலில் டேவி ஜேக்கப்சை(0) போல்டாக்கினார். அடுத்த ஓவரில் ஆபத்தான ரிச்சர்டு லீவியையும்(1) போல்டாக்கி அசத்தினார்.

 பின் அகார்கர் பந்தை தட்டி விட்டு ஒரு ரன்னுக்காக ஓடினார் அம்பதி ராயுடு. ஆனால், மறுமுனையில் இருந்த ரோகித் சர்மா மறுக்க, ராயுடு(4) பரிதாபமாக ரன் அவுட்டானார். அதிரடி போலார்டு(1), உமேஷ் யாதவ் வேகத்தில் வீழ்ந்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ரோகித் சர்மா(29), அகார்கர் பந்தில் நடையை கட்டினார்.

 தினேஷ் கார்த்திக்கும்(3) கைவிட, மும்பை அணி 10.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 44 ரன்கள் மட்டும் எடுத்து தத்தளித்தது.ஹர்பஜன் ஆறுதல்:பின் கேப்டன் ஹர்பஜன், மெக்காய் இணைந்து போராடினர்.

 அகார்கர் ஓவரில் ஹர்பஜன் ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரி அடித்தார். இர்பான் பந்தில் மெக்காய்(8) அவுட்டானார். ஆர்.பி.சிங்(0) ஏமாற்றினார். சிறிது நேரம் அதிரடி காட்டிய ஹர்பஜன்(33), மார்னே மார்கல் பந்தில் வெளியேறினார். மும்பை அணி 19.2 ஓவரில் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சுலப வெற்றி:போகிற போக்கில் எட்டக்கூடிய இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு சேவக், நமன் ஓஜா இணைந்து நல்ல துவக்கம் தந்தனர். முனாப் படேல் வீசிய முதல் ஓவரிலேயே சேவக் ஒரு சிக்சர் அடித்தார்.

 மெக்காய் ஓவரில் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். ஆர்.பி.சிங் வேகத்தில் நமன் ஓஜா(13) அவுட்டானார். அடுத்த வந்த பீட்டர்சனும்(9), ஆர்.பி.சிங் பந்தில் வீழ்ந்தார்.பின் சேவக், ஜெயவர்தனா சேர்ந்து நிதானமாக ஆடினர். ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்த இவர்கள், ஸ்கோரை நகர்த்தினர். பிரக்யான் ஓஜா சுழலில் சேவக்(32) சிக்கினார்.

விவேகமாக விளையாடிய ஜெயவர்தனா(17*), ராஸ் டெய்லர்(11*) இணைந்து வெற்றியை உறுதி செய்தனர். டில்லி அணி 14.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 93 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது.ஆட்ட நாயகன் விருதை டில்லி வீரர் நதீம் வென்றார்.இரண்டு சிக்சர்ஐ.பி.எல்., போட்டிகளில் பொதுவாக சிக்சர்கள் பறக்கும். ஆனால், நேற்று ஆடுகளம் பவுலர்களுக்கு ஒத்துழைக்க, இரண்டு சிக்சர்கள் மட்டுமே அடிக்கப்பட்டன.

மும்பை சார்பில் ஹர்பஜனும், டில்லி சார்பில் சேவக்கும் தலா ஒரு சிக்சர் அடித்தனர்.குறைந்த ஸ்கோர்டில்லி அணிக்கு எதிராக 92 ரன்களுக்கு சுருண்ட மும்பை இந்தியன்ஸ் அணி, ஐ.பி.எல்., அரங்கில் தனது இரண்டாவது குறைந்த ஸ்கோரை பெற்றது. முன்னதாக கடந்த ஆண்டு மொகாலியில் நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை அணி 87 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.* இது,
இத்தொடரில் இதுவரை நடந்துள்ள போட்டிகளில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர். முன்னதாக டில்லி அணிக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் கோல்கட்டா அணி 9 விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்தது.

இப்போட்டி மழை காரணமாக தலா 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது.* தவிர, 17வது முறையாக ஐ.பி.எல்., அரங்கில் 100 அல்லது அதற்கும் குறைவாக ரன்கள் பதிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment